உலகின் பெரிய "ரிங்" ரோடுகளில் ஒன்று பார்ட் 3 வேலைகள் தொடங்கியது சென்னைக்கே விடிவுகாலம்!
உலகின் பெரிய "ரிங்" ரோடுகளில் ஒன்று பார்ட் 3 வேலைகள் தொடங்கியது சென்னைக்கே விடிவுகாலம்!
சென்னை பெரிபெரல் ரிங் ரோடு திட்டத்தின் 3ம் கட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் நெரிசல் ஆகியவற்றை குறைப்பதற்காக சென்னை எல்லை சாலைத் திட்டம் கட்டப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரை 132.87 கிமீ தூரத்துக்கு பல்வேறு கட்டங்களாக சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தின் பகுதி-3-இன் கீழ்,
🛣️ திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் வெங்கத்தூர் வரை 10.4 கி.மீ தூரத்திற்கும்,
🛣️ வெங்கத்தூர் முதல் செங்காடு வரை 10 கிமீ தூரத்திற்கும்,
🛣️ செங்காடு முதல் திருப்பெரும்புதூர் வரை 9.7 கி.மீ அளவிலும்,
இப்படி சுமார் 30 கிமீ தூரத்துக்கு, ரூ.2689.74 கோடி செலவில் புதிய ஆறுவழிச்சாலை மற்றும் இருவழி சேவைச் சாலை அமைப்பதற்கான பணிகளை திருவள்ளூரில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இந்த சாலைப்பணி நிறைவுற்றால், தமிழ்நாட்டின் போக்குவரத்து வசதி மேம்படுவதோடு, தொழில்துறை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலை விவரம்
சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு கட்டுமானத்தில் சிங்கப்பெருமாள்கோயில் முதல் மாமல்லபுரம் வரையிலான 5வது பிரிவுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானின் அரசு நிறுவனமான ஜைகாவிடமிருந்து 2,784 கோடி வெளிநாட்டு நிதி பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் (TNRDC) சென்னை சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து பூஞ்சேரி (மாமல்லபுரம் அருகே) வரையிலான சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு பிரிவு 5க்கு நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய பணிகளை செய்ய ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர்களை வெளியிட்டு உள்ளது.
டார்கெட் என்ன
இந்த விரைவுச்சாலை கட்டுமானத்திற்கு 2025 ஆம் ஆண்டு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. NHAI இன் கட்டுப்பாட்டின் கீழ் கட்டுமானத்தில் உள்ள பெங்களூரு சென்னை விரைவுச்சாலை மற்றும் சித்தூர் - தச்சூர் விரைவுச்சாலை திட்டங்களுடன் இது இணைக்கப்படும். அதன் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது.
மொத்த மதிப்பிடப்பட்ட செலவு: ரூ. 12,301 கோடி
திட்டத்தின் நீளம்: 132.87 கிமீ (தோராயமாக)
பாதைகள்: 10 வழி பாதைகள் (மெயின் சாலை 6 பாதைகள் + இருபுறமும் 2 சேவைப் பாதைகள்)
வடிவமைப்பு வேகம்: மணிக்கு 120 கிமீ
நிலை: எண்ணூர் - தச்சூர் பிரிவு கட்டுமானத்தில் உள்ளது
கடைசி தேதி: 2025
உரிமையாளர்: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC)
திட்ட மாதிரி: பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC)
நிதி ஆதாரங்கள்: பிரிவு 1 (25.31 கிமீ எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை)
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA, 40,074 மில்லியன் யென் கடன்)
டெண்டர் பணிகள்
எண்ணூர் துறைமுகம் மாமல்லபுரத்தில் இருந்து 133 கிமீ நீளமுள்ள சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டின் பெரும்பகுதி 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக முக்கியமான சில இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கிமீ தூரத்திற்கு இந்த சாலை கட்டப்பட உள்ளது. சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPRR) என்பது, எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரத்தை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் 10 வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலையாகும். காட்டுப்பள்ளி வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது.
5 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே சென்னையின் 4வது ரிங் ரோடாக இருக்கும். சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவொயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சாலை தொடர்பான விவரங்கள்
பிரிவுகள் 2 & 3 (56.2 கிமீ தச்சூர் முதல் செங்காடு வரை): ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB, USD 378 மில்லியன் கடன்) மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான OPEC நிதி (OFOD, USD 100 மில்லியன் கடன்) ஆகிய உதவிகள் மூலம் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
பெரிய சாலை: சென்னையில் அமைக்கப்பட உள்ள இந்த 10 வழி சாலை இந்தியாவிலேயே பெரிய சாலையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அமைக்கப்படும் சாலைகளில் மட்டுமன்றி.. உலகில் அமைக்கப்படும் சாலைகளிலேயே பெரிய ரிங் ரோடு சாலையாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
ஆம் உலகில் எங்கும் 132 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரிங் ரோடு அமைக்கப்படவில்லை. இந்தியாவில் மட்டுமே முதல்முறையாக.. அதுவும் சென்னையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் 10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் இரண்டு கட்டமாக நிறைவடைந்து ஜனவரியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தை விரைந்து முடிக்க எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி, எல் அண்ட் டி உள்ளிட்ட தனியார் துறைமுக நிறுவனங்கள் தமிழக அரசை வலியுறுத்தின. இந்த சாலை முடிந்தவுடன் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிச்சொற்கள்: