தேற்றாங்கொட்டை
தேற்றாங்கொட்டை
தேற்றா (Strychnos potatorum) என்பது ஒரு வகை மரம். இதன் இலைகள், பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலைகளையும், உருண்டையான விதையினையும் உடைய குறுமரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும், சமவெளிகளில் ஒவ்வொரு இடத்தில் காணப்படுகிறது.
இதன் பழம், விதை, ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. திருகுவளை என்னும் திருக்கோவில் தலத்தின் தலமரமாக விளங்குவது தேற்றா மரமாகும். தேற்றாங்கொட்டை என்பது சேறுடன் கலங்கிய நீரைத் தெளிய வைக்க தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் தேற்றா மரத்தின் விதை ஆகும்.
குளம், ஊரணிகளின் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். இந்நீரை அப்படியே குடிக்க இயலாது. எனவே சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க தேத்தாங்கொட்டையை கலங்கிய நீருள்ள பானையின் உட்புறம் தேய்ப்பர். சில மணி நேரங்களுக்குப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும்.
தேற்றான் கொட்டை, உடலை தேற்றும் குணம் கொண்டதாலும், நீரை தெளிய வைப்பதாலும், தேற்றான் என்று வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சி அறிக்கையில், தண்ணீரை தெளிய வைக்க தேற்றான்கொட்டை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும். அதிலுள்ள 1:7 என்ற கலவையே தண்ணீரை தெளிய வைக்க காரணமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: