தமிழ் புலவர் ஔவையார்
தமிழ் புலவர் ஔவையார்
ஔவையார் என்றதுமே நம் எல்லோருக்கும் நினைவில் வருவது ஆத்திச்சூடி பாடலாகும். ஔவை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
பழந்தமிழ் அகராதி, ஔவை என்பதற்கு மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தினைக் கூறுகிறது. பிற்காலத்தில் இச் சொல்லுக்கு ஆண்டு, அறிவு ஆகியவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிப்பதாக விளங்கிற்று.
பெண் புலவரான ஔவையார் என்ற பெயரில் பலர் இருந்ததாக நம்பப்படுகிறது. நூலமைதி, தமிழ்நடை, அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது தெளி வாகிறது.
கி.மு.2ம் நூற்றாண்டுக்கு முன் சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் நாம் படங்களில் பார்த்தது போல வயதானவர் அல்ல, இளமை ததும்பும் விறலி. விறலி என்பது பெண்பாலைக் குறிக்கும் சொல். விறலி என்பவள் பாண்மகள் எனவும் அழைக்கப்படுகிறாள்.
அதியமானுக்கு நெல்லிக் கனி கொடுத்தது இவரே. சேரன், சோழன், பாண்டியன் மற்றும் நாஞ்சில் வள்ளுவன் ஆகியோரைப் பற்றி ஔவையார் பாடல்களைப் பாடியுள்ளார். அகநானாறு, புறநானாறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய பாடல்களைப் பாடிய வரும் இவரே.
இவர் பாடிய 59 பாடல்கள் சங்கநூல் களில் இடம் பெற்றுள்ளன. சங்கப் புலவர்கள் பாடல் தொகை வரிசையில் ஔவையார் 9 வது இடத்தைப் பெற்றுள்ளார். கி.பி.2 ம் நூற்றாண்டிற்கும் கி.பி.10ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் 2 வது ஔவையார் ஆவார்.
மூவேந்தர்களைப் பற்றி பாடல்களைப் பாடியுள்ளார். அங்கவை, சங்கவை ஆகியோரின் திருமணத்தை முன்னின்று நடத்தியவர் இவரே. சங்ககால மன்ன னான பாரி மன்னனின் இரு புதல்விகள்தான் அங்கவை, சங்கவை. சங்கப் பாடல்களில் இவ்விரு வரது பெயர்கள் இல்லையென்றாலும் மலையரசனான தெய்வீகனுக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறும் பாடல்கள் சில உள்ளன.
இதற்கு மாறாக, விச்சிக்கோ என்பவன் பாரியின் மகள்களை திருமணம் செய்ய மறுத்து விட்டான் என்றும், இருங்கோவேள் என்பவனும் மறுத்து விட்டான் என்றும் அதனால் பிராமணனுக்குத் திரும ணம் செய்து கொடுத்துவிட்டு கபிலர் வடக்கிருந்து உயிர்நீத்தார் என்றும் செய்தி கூறுகிறது.
சங்கப் புலவர் கபிலர் பாரியின் மகள்களை மலையமானுக்குத் திருமணம் செய்து வைத்தார் என்ற செய்தி கல் வெட்டாக வடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய சங்கப் பாடல்களும் உண்டு.
கி.பி.12ம் நூற்றாண்டில் வாழ்ந்த 3 வது ஓளவையார் சோழர்களது ஆட்சியில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். சோழ மன்னனைப் பற்றி அசதிக்கோவை பாடியுள்ளார்.
விக்கிரம சோழன் வரலாற்றில் இதனைக் காணலாம். கி.பி.14ம் நூற்றாண்டில் வாழ்ந்த 4 வது ஓளவையார் ஒரு சமயப் புலவராவர். ஔவை குறள், விநாயக அகவல் ஆகியவற்றைப் பாடியுள்ளார். விநாயகரைப் பற்றி பாடல்களைப் பாடியுள்ளார். அகவல் பாடல்கள் இவருக்கு சான்றாக விளங்குகிறது.
கி.பி.16, 17ம் நூற்றாண்டில் பிற்காலத்தில் வாழ்ந்தவர் 5 வது ஔவையார்ஆவார். இவரைப் பற்றிய செய்திகளை தமிழறியும் பெருமான் கதை மூலம் அறியலாம். கி.பி. 17, 18ம் நூற்றாண்டில் பிற்காலத்தில் வாழ்ந்தவர் 6 வது ஔவையாராகும்.
பந்தன் என்ற வணிகன் செய்த நன்மைகளைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் பந்தன் அந்தாதி எனப்படுகிறது. இவ்வாறு ஔவையார் என்ற பெயரில் வெவ்வேறு காலகட்டங்களில் 6 பேர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை அவர்கள் பாடிவைத்த பாடல்களிலிருந்தும், அக்காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வரலாற்று குறிப்புகளிலிருந்தும் நாம் கண்டுணர முடிகின்றது. அவர்கள் அனைவரும் தமிழுக்குச் செய்த நன்மைகள் போற்றப்படத் தகுந் ததாகும்.
குறிச்சொற்கள்: