நிலவேம்பு
நிலவேம்பு
நிலவேம்பு முழுத் தாவரமும், கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது.
நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. இதன் இலைகள் நீள் முட்டை வடிவமானவை. இதன் மலர்கள், கணுக்களிலும், நுனியிலும், குறுக்கு மறுக்காக அமைந்தவை. பூக்கள் வெண்மையானவை. நாக்கு போன்று நீண்டு ஊதா நிறப்புள்ளிகளுடன் காணப்படும். இதன் காய்கள் வெடிக்கும் தன்மையானவை.
விதைகள் சிறியவை. மஞ்சள் நிறமானவை. நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை, மிளகாய்நங்கை, குருந்து, கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக விளைகின்றது. இதில் மெத்தைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகிறது. இதனுடைய பயன்கள், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும். புத்தி தெளிவு உண்டாகும். மலமிளக்கும். தாதுக்களைப் பலப்படுத்தும். காய்ச்சல் குணமாகும்.
கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். இதை அருந்துவதால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். பாம்புக்கடி விஷத்தை முறிக்க செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
கஷாயம் செய்முறை:
நிலவேம்பு : 15 கிராம்
கிக்சிலத்தோல் : 5 கிராம்
கொத்தமல்லி : 5 கிராம்
- இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, அப்படியே மூடி ஒரு மணி நேரங்கழித்து வடிகட்டி பின்பு நாள் ஒன்றுக்கு 30மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.
- விஷ காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் சிறந்தது. இது பொடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் நிலவேம்பு, சுக்கு, பட்படாகம், வெட்டிவேர், விளாமிச்சை வேர், மிளகு, சந்தனம் போன்ற மூலிகைள் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
- ஏழு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கொடுக்கக்கூடாது. வீட்டில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் வந்தால், அவருடன் சேர்த்து வீட்டில் உள்ள மற்றவர்களும் நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.
- காய்ச்சல் வந்த நாளே நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும். மூன்று, நான்கு நாட்கள் தள்ளிப்போடுவது ஆபத்தை நோக்கிப் பயணிக்க வைக்கும். ஆகவே முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு கஷாயம் பருகுவோம். உடல் நலம் காப்போம்.
குறிச்சொற்கள்: