கொசு
கொசு
கொசு க்யூலிசிடே குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சியின மாகும். இவை சிறிய உடல், ஓர் ஜோடி இறக்கைகள், மற்றும் நீண்ட கால்களை கொண்டவை ஆகும். ஆண் கொசுக்கள் தாவர சாற்றைப் பருகும். பெண் கொசுக் களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களி லிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும் என்றாலும் பெண் கொசுக்களுக்குக்கூட இரத்தம் முதன்மையான உணவல்ல.
முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங் களைப் பெறுவதற்காகவே பெண் கொசுக்கள் இரத்தம் குடிக்கின்றன. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப இரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்து விடுகிறது.
வீடுகளிலுள்ள கொசுக்கள் சுமார் ஆயிரம் அடி தொலைவு வரையே நடமாடும் தன்மை கொண்டவை. அதனாலேயே அவை மனிதர்கள் மற்றும் கால்நடைகள் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும்.
கொசுக்களில் உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்கிற ஒரு வகை, நீர்நிலை களில் வசிக்கும். அவை மனிதர் களையும் கடற்கரை ஓரமுள்ள விலங்கு களையும் தேடி 50 முதல் 75 மைல் தொலைவுக்குக்கூடப் பயணம் செய்யும் தன்மையுடையவை.
ஆண் கொசுக்கள் ஏறக்குறைய ஒரு வாரமே வாழுக்கூடியது. ஆண்கொசுக் கள் முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் சேர்ந்து வாழ்க்கை பயணத்தை தொடங்கும். பிறகு ஏதாவது இலையில் அமர்ந்து சாற்றைக் குடித்துக்கொண்டு காலம் கழித்து விடும்.
பெண் கொசுக்கள் மனிதரிடம் இரத்ததை உறிஞ்சியவு டன் முட்டையிடத் தேவையான புரதத்தைப் பெற்றுக் கொள்கின்றன. பின்னர் இவை தேங்கியுள்ள நீர் நிலைகளில் முட்டையிடுகின்றன. பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதமே உயிருடன் இருக்கும். அந்த ஒரு மாதத்திற்குள் ஏதாவது ஒரு நீர்நிலையில் சராசரியாக ஒரே சமயத்தில் நூறு முட்டைகளை இடும். இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறு தலை முறை களில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது.
கொசு மனித ரத்தத்தை நுண்ணிய ஊசி போன்ற உறுப்பால் உறிஞ்சி தனது வயிற்றுகுள் செலுத்தும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு ரத்தத்தை உறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்.
கொசு இனங்களில் அனோஃபிலக்ஸ் எனப்படும் கொசு இனத்தின் பெண் கொசுக்களே, உலகின் சில பாகங் களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கடத்தும்.
கொசு இனங்கள் மிகப்பழமையானதொரு உயிரின மாகும். சுமார் 46 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இருவேறு கொசுக்களின் படிமங்கள் தற்காலத்திலிருந்து சற்றே மாறுபட்ட புற உடல மைப்பைப் பெற்றிருந்தன. மேலும் இவற்றின் வயிற்றுப்பகுதியில் மிகப்பழமையான இரத்தம் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. சமீபத்திய ஆய்வுகள், சுமார் 226 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கொசுவினங்கள் அனாஃபிலினே, க்யூலிசினே போன்ற துணை குடும்பங்களுக்கு வழிவகுக் கும் மரபுவழிகளாக இருந்திருக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றன. சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பழைய மற்றும் புதிய அனாஃபிலஸ் இனங்கள் பரிணாம மாற்றம் அடைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
அனாஃபிலினே, க்யூலிசினே ஆகிய இரண்டு பிரதான துணை குடும்பங்களும் மேலும் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. அது மட்டுமல்லாது நோயை பரப்பும் நோய் காரணிகளைக் கொண்டும் இவை வகைப் படுத்தப்படுகின்றன. சான்றாக, மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், போன்ற தொற்று நோய்கள் க்யூலிசினே வகைகளால் பரவுகின்றன. மலேரியா நோயை அனாஃபிலின் கொசுக்கள் பரப்புகின்றன.
உலகெங்கிலும் சுமார் 3500 சிற்றினங்கள் வகைப் படுத்தப்பட்டுள்ளன. சில நோய் காரணிகளை கடத்துபவையாகவும், சில விலங்குகளில் நோய் பரப்புவனவாகவும் இருக்கின்றன. பெரும்பாலான சிற்றினங்களில் இரத்தம் உறிஞ்சும் கொசுக்கள் பெண் கொசுக்களாகும்.
சில சிற்றினங்கள் நோயைப் பரப்பும் நோய் பரப்பிகளாக இருக்கின்றன. சில வீட்டில் உள்ளோரிடம் நோயைப் பரப்புவனவாகவும், சில காட்டில் நடமாடுபவர்களிடம் நோயை பரப்புபவையாகவும் உள்ளன.
கொசுக்களின் வாழ்க்கை சுழற்சியில் நான்கு முக்கியப் பருவங்களைக் கொண்டுள்ளன. அவை முட்டை, லார்வா புழு, கூட்டுப்புழு பின் மூதுயிரியாக மாற்றம் அடையும். இவற்றின் உருமாற்ற நிலைகள் பொதுவாக சுற்றுச்சூழலின் வெப்பநிலை, சிற்றினத்தைப் பொருத்து வேறுபடும். 4-30 நாட்கள் வரையிலாக இதன் பருவ உருமாற்றம் நிகழ்கிறது. இதன் தேவையான வெப்பநிலை 60°F முதல் 80°F ஆகும்.
ஏடியஸ், ஆக்லரோடாட்டஸ் போன்ற இனங்கள் ஈரமான இடங்களில் முட்டையிடுகின்றன. சாதகமான சூழலில் இவை நீரில் சென்று பொறிக்கப் படுகின்றன. பெரும்பாலான கொசு முட்டைகள் 48 மணி நேரத்திற் குள் பொறிக்கப்பட்டு லார்வா புழுக்களாகின்றன.
கூட்டுபுழுவிலிருந்து வெளிவரும் மூதுயிரி நீரின் புறப்பரப்பிலிருந்து ஈரத்தை உலர்த்தி பின்னர் பறப்பதற்கு ஏதுவாக மாறுகிறது. இவைகள் மூதுயிரி யாக மாற்றம் பெற்ற இரு நாட்களுக்கு உணவு உட் கொள்ளுதலும், இனப்பெருக்கமும் பெரும்பாலும் மேற்கொள்வதில்லை.
அனாஃபிலக்ஸ், ஏடியஸ், ஆக்லரோடாட்டஸ் முட்டை கள் ஒவ்வொன்றாக இடப்படுகின்றன. இவை ஒன்றி ணைவதில்லை. ஆனால் க்யூலிசிடே, க்யூலெக்ஸ் போன்ற கொசுக்களின் முட்டைகள் சுமார் 100-200 எண்ணிக்கையில் இருக்கும். இவை இணைந்து நீரின் மேற்புறத்தில் மிதக்கின்றன.
இவை சைஃபோன் குழாய்களை நீரின் புறப்பரப்பில் மிதக்க வைத்து தலைகீழாக நீரில் மிதந்து அதன் மூலம் சுவாசிக்கின்றன. ஆனால் அனாஃபிலஸ் இனத்தில் சைஃபோன் குழாய்கள் இல்லாததால் நீரின் புறப்பரப்பில் மிதந்து சுவாசிக்கின்றன.
பின் கூட்டுப்புழு பருவத்தில் அவை ஊட்டமில்லாமல் ஓய்வு நிலையில் இருக்கின்றன. இக்கூட்டு புழுக்கள் வண்ணத்துப் பூச்சிகளில் உள்ள பருவநிலையைப் போன்று மூதுயிரியாக மாற்றமடைகின்றன.
நோய் பரப்பும் கொசு
- மலேரியா - அனாஃபிலஸ் காம்பியே வகையைச் சேர்ந்த பெண் கொசு.
- சிக்கன்குனியா - ஏடிஸ் எகிப்தீ அல்லது ஏடிஸ் அல்போபிக்டஸ் வகை கொசு.
- மூளை காய்ச்சல் - க்யூலக்ஸ் டர்சாலிஸ் வகை கொசு.
- டெங்கு காய்ச்சல் - ஏடிஸ் எகிப்தீ வகை கொசு.
- யானைக்கால் நோய் - க்யூலக்ஸ் குயின்கிஃபேசியேடஸ் கொசு.
கட்டுப்படுத்தும் முறைகள்
தேங்கிய நீர்நிலைகள், வடியாத மழைநீர், திறந்த வெளி சாக்கடைகள் கொசு உற்பதியாகும் இடங்கள் இவற்றை தூய்மையாக வைக்கவும். கதவு, ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் அமைத்தல், கொசுவலைகளைப் பயன்படுத்தல், கொசு பேட்டுகள் பயன்படுத்துதல் மற்றும் கொசு விரட்டிகளை பயன்படுத்துதல் இவற்றின்மூலம் கொசுவை கட்டுப்படுத்தலாம்.
குறிச்சொற்கள்: