வீட்டில் இருந்தே செய்யும் சிறுதொழில்
வீட்டில் இருந்தே செய்யும் சிறுதொழில்
குறைந்த முதலீட்டில் லாபம் கிடைக்கும் மூலிகை டீ, காபி பொடியை யார் வேண்டுமானாலும் எளிதில் தயாரிக்கலாம்.
உடல் நலனுக்கு சிறந்த மூலிகை டீ, காபித்தூள் தயாரிப்பது எளிதானது. ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் மூலிகை டீ, காபித்தூள் தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். வழக்கமாக டீ, காபி அதிகம் குடித்தால் பித்தம் என்பர்.
தலைவலி, சளி, அஜீரணம், பசியின்மையை மூலிகை டீ, நீக்கும். மூலிகை காபி ரத்த அணுக்களை அதிகப்படுத்தும். உடல் வலிமை, புத்துணர்ச்சி ஏற்படும். மூலிகைகள் பக்க விளைவுகள் இல்லாதவை. உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தி பலன் பெறலாம். குறைந்த முதலீட்டில் லாபம் கிடைக்கும் மூலிகை டீ, காபி பொடியை யார் வேண்டுமானாலும் எளிதில் தயாரிக்கலாம்.
மூலிகை டீத்தூள் தயாரிக்கும் முறை:
ஆவாரம் பூ, தாமரை, ரோஜா, செம்பருத்தி, வாழை பூ, வேம்பு, அகத்திப் பூ ஆகிய 7 வகை பூக்கள் தலா ஒரு கிலோ எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை தனிதனியாக நல்ல தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து 2 மணி நேரம் காய வைக்க வேண்டும். பின்னர் அதை மெஷினில் அரைத்து, சலித்தால் மூன்றரை கிலோ மூலிகை பொடி கிடைக்கும். அதில் 2.5 கிலோ டீத்தூள் கலந்தால் மூலிகை டீத்தூள் தயார்.
மூலிகை காபித்தூள் தயாரிக்கும் முறை:
சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, சீரகம், விளாமிச்சை வேர், அஷ்வகந்தா போன்ற 7 வகை பொருட்கள் தலா ஒரு கிலோ, எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை தனித்தனியாக காய வைத்து, மெஷினில் அரைத்து, சலித்தால் மூன்றரை கிலோ மூலிகை பொடி கிடைக்கும். அதில் 2.5 கிலோ காபித்தூள் கலந்தால் மூலிகை காபித்தூள் தயார். மூலிகை டீத்தூள், காபி தூள்களை 100 கிராம் பாக்கெட்களில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.
கிடைக்கும் இடங்கள்:
மூலிகை பொருட்கள் கோவை, மதுரை, தூத்துக்குடியில் உள்ள நாட்டு மருந்துக் கடைகளிலும், கேரள மாநிலம் மூவாட்டுப்புழா மற்றும் பாலப்பட்டியில் உள்ள நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.மெஷின்கள் கோவை உள்பட முக்கிய நகரங்களில் கிடைக்கிறது. மற்ற பொருட்கள் உள்ளூரிலேயே கிடைக்கும்.
தேவையான இடவசதி:
அரைக்கும் மெஷின், சலிக்கும் மெஷின், பேக்கிங் மெஷின் வைப்பதற்கு குறைந்தபட்சம் 20க்கு 10அடி அறை, மூலிகை பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்களை இருப்பு வைக்க 10க்கு 10 அடி அறை. மூலிகைகளை காய வைக்க 10க்கு 10 அடியில் சிமெண்ட் தளம் போட்ட வெட்டவெளி.
முதலீடு:
இதற்கு தேவையான முதலீடு என்று பார்க்கும் பொழுது, மெஷின் வகையில் சுமார் ரூ 50,000 தேவைப்படும். ஒரு மாதத்துக்கு உற்பத்தி செலவு என்று பார்க்கும் பொழுது ஒரு இயந்திரம் மூலம் தினசரி 6 கிலோ மூலிகை டீத்தூள், 6 கிலோ மூலிகை காபித்தூள் உற்பத்தி செய்யலாம்.
150 கிலோ மூலிகை டீத்தூள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் வாங்குவதற்கு ரூ 35,000/ தேவைப்படும். இதேப் போல் மூலிகை காபித்தூள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் வாங்குவதற்கு ரூ. 50,000/- தேவைப்படும். 2 தொழிலாளர்கள் சம்பளம், மின் கட்டணம், இதர செலவுகள் என ஒரு மாத உற்பத்திக்கு ரூ. 1,00,000/ தேவைப்படும்.
கிடைக்கும் லாபம்:
மூலிகை டீத்தூளை 100 கிராம் பாக்கெட்களில் பேக்கிங் செய்து மொத்த விற்பனை என்றால் ரூ.35, சில்லரை விற்பனை என்றால் ரூ 45க்கும் விற்கலாம். அதே போல் மூலிகை காபித்தூளை மொத்த விற்பனை என்றால் ரூ 45, சில்லரை விற்பனை என்றால் ரூ.55க்கும் விற்கலாம். நேரடியாக விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
விற்பனை வாய்ப்பு:
டிபார்ட்மென்டல் ஸ்டோர், மொத்த மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்யலாம். சிறிய மளிகைக் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். வீடு, வீடாகவும் அறிமுகப்படுத்தி விற்கலாம். சாதாரண டீ, காபியை விட மூலிகை டீ, காபி குடிப்பது ஆரோக்கியத்தை தருவதால் வாடிக்கையாளர்கள் பெருகி விற்பனை அதிகரித்து, லாபம் பன்மடங்காகும்.
குறிச்சொற்கள்: