விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க போதும்
விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க போதும்
தற்போது உலகளவில் ஆண்கள் சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்சனை தான் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், அதன் இயக்கம் பலவீனமாக இருப்பதும் தான். இப்பிரச்சனையை ஆண்கள் ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், பின் நாளடைவில் அது ஆண் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும். சொல்லப்போனால் இவ்விரு பிரச்சனையால் தான் தற்போது பல தம்பதிகள் கருத்தரிப்பதில் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
இதில் விந்தணுக்களின் எண்ணிக்கை என்பது விந்து மாதிரியில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் இயக்கம் என்பது விந்தணுக்கள் திறமையாக நகரும் திறனைக் குறிக்கிறது. இவ்விரண்டும் சிறப்பாக இருந்தால் தான், வெற்றிகரமாக கருத்தரிக்க முடியும்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆண்கள் சந்திக்கும் இந்த விந்தணு பிரச்சனைகளுக்கு தீர்வு காண உணவுகள் பெரிதும் உதவி புரியும். சரியான ஊட்டச்சத்துக்களை போதுமான அளவில் பெற்று வந்தால், இனப்பெருக்க ஆரோக்கியம் மேம்படுவதோடு, விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு, அதன் இயக்கமும் மேம்படும். இதுக்குறித்து டாக்டர் ஐசக் அப்பாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்த உதவும் 4 உணவுகள் குறித்து கூறியுள்ளார்.
1. தக்காளி
தக்காளியானது நமது தினசரி உணவில் சேர்க்கப்பட்டு வரும் ஒரு காய்கறியாகும். "தக்காளியில் உள்ள வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி செல்களின் மேம்பாட்டிற்கு உதவும். அதுவும் இதில் உள்ள லைகோபீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் விந்தணுவை டிஎன்ஏ சேதத்தில் இருந்து பாதுகாக்கும்" என்று டாக்டர் ஐசக் கூறினார்.
2. பூண்டு
"வெள்ளைப்பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் கலவை, ஆணுறுப்பின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, விந்தணுக்களின் உற்பத்தியை பெருக்கும். மேலும் இதில் இருக்கும் செலினியம் என்னும கனிமம், விந்தணுக்களின் இயக்கத்தையும், வேகத்தையும் அதிகரிக்க உதவும்" என்று டாக்டர் கூறினார். எனவே இதுவரை உணவில் இருக்கும் பூண்டு பற்களை ஒதுக்கி வைத்து வந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள்.
3. மீன்
"மீனில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் விந்தணுவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்" என்று டாக்டர் ஐசக் கூறினார். எனவே விந்தணு பிரச்சனையை சந்திக்காமல் இருக்க நினைத்தால், வாரம் 2 முறையாவது மீனை உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் விந்தணு குறைபாடு பிரச்சனைத் தடுக்கலாம்.
4. மாட்டிறைச்சி
"மாட்டிறைச்சியில் இருக்கும் கார்னிடின் என்னும் கலவை, செல்களில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் சேதத்தில் இருந்து காக்கும். இந்த சேதம் தான் ஆண், பெண் என இருபாலருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான முக்கிய காரணி" என்று டாக்டர் ஐசக் கூறினார். அதுவும் மாட்டின் கல்லீரலை உட்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், அதில் கோஎன்சைம் Q10 உள்ளது. இது விந்தணுவின் உடலமைப்பில் சேதங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் என்றும் டாக்டர் கூறினார்.
முக்கியமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உட்கொள்வது மட்டுமல்லாமல், தினசரி உடற்பயிற்சியிலும் அவசியம் ஈடுபட வேண்டும் என்றும் டாக்டர் ஐசக் அப்பாஸ் அறிவுறுத்தினார்.
எனவே நண்பர்களே! உங்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதன் இயக்கத்தை மேம்படுத்தவும் எளிய வழிகளை தேடிக் கொண்டிருந்தால், மருத்துவர் கூறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சற்று அதிகமாக உட்கொள்ளுங்கள். முக்கியமாக உடற்பயிற்சியை தவறாமல் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
குறிச்சொற்கள்: