சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான் மூலிகை
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான் மூலிகை
சிறு குறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். சர்க்கரை கொல்லி என்ற பெயரும் அதற்கு உண்டு. சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட இந்த காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கு மவுசு அதிகரித்துள்ளது. கொடியாக படரும் தாவரமான சிறுகுறிஞ்சானின் இலை சிறியதாகவும், இலையின் நுனி கூர்மையானதாகவும் இருக்கும்.
தினமும் இன்சுலின் ஊசி போடும் அளவிற்கு உள்ள டைப் 1 சர்க்கரை நோயாளியின் நோயை கூட சிறுகுறிஞ்சான் சாதாரணமாக கட்டுப்படுத்துகிறது. எல்லா இந்திய மருத்துவ முறைகளிலும் இந்த மூலிகைக்கொடி மூட்டு நோய், இருமல், அல்சர் மற்றும் கண்களில் வலி ஆகிய நோய்களுக்கான மருந்தை தயாரிக்க பயன்படுகிறது.
அழற்சி, வயிற்று மந்தம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுகிறது. அதன் வேர்கள் பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாகும்.
ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாச நோய்கள், இதர நுரையீரல் நோய்களுக்கும் சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் மருந்தாக திகழ்கிறது. அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதாலும் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும் நுரையீரல் வீக்கம் ஏற்படுகிறது. இதற்கு சிறுகுறிஞ்சான் வேர் சிறந்த மருந்து.
குறிச்சொற்கள்: